×

வெங்கமேடு சாலையில் சேதமான கழிவுநீர் வடிகால் பாலம்

கரூர், மார்ச் 5: வெங்கமேடு பெரியார் சாலையில் உடைந்து சேதமான கழிவுநீர் வடிகால் பாலத்தை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் வெங்கமேடு சாலையில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டிருக்கிறது. தெருவின் குறுக்கே வடிகால் ஓடையை இணைக்கும் வகையில் கல்வெர்ட் எனப்படும் சிறுவடிகால் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் உடைந்து காணப்படுகிறது. பராமரிப்பு வேலைகள் செய்யாததால் சிமெண்ட் காரைகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்பவர்கள் வீடுகளுக்கு சென்றுவர முடியாமல் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் வடிகால் பாலத்தை செப்பனிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewer bridge ,Venkamadu ,road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...