×

ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா: போலீஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

ஊத்துக்கோட்டை, மார்ச் 5:  ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க  1,500  இடங்களிலில்  சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்யவேண்டும் என போலீசார் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, வெங்கல், பென்னலூர்பேட்டை ஆகிய காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆளினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டிஎஸ்பி சந்திரதாசன் தலைமை தாங்கினார்.  இன்ஸ்பெக்டர்கள் ஊத்துக்கோட்டை ரமேஷ், பெரியபாளையம் மகேஸ்வரி, வெங்கல் ஜெயவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வரவேற்றார்.

கூட்டத்தில்,  ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள அந்தந்த காவல் நிலையத்தில் உள்ள ரவுடிகள் குறித்து அந்த காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள 5  காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வீடுகள், கிராமமக்கள்  என 1,500 இடங்களில் வழிப்பறி, திருட்டு, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்ற சம்பவங்களை தடுக்க  சிசிடிவி கேமரா வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவரவர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இறுதியில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் நன்றி கூறினார்.

Tags : incidents ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி