×

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் குடி நீர் பிரச்னை தீர்வுக்கு கூடுதல் நிதி: ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்

கும்மிடிப்பூண்டி, மார்ச் 5: கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் 38 பெண் ஊராட்சி தலைவர்களும், 23 ஆண் ஊராட்சி தலைவர்களும் உள்ளனர். தொடர்ந்து 61 ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக சுண்ணாம்புகுளம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.ரவி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், செயலாளராக கண்ணம்பாக்கம் ஊராட்சி தலைவர் சதீஷ், பொருளாளராக தண்டலச்சேரி ஊராட்சி தலைவர் ஆனந்தராஜ், சட்ட ஆலோசகராக பூவலம்பேடு ஊராட்சி தலைவர் வழக்கறிஞர் வெங்கடாசலபதி, கௌரவ தலைவராக கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதேபோல் துணை தலைவர்களாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், மாதர்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன், கொள்ளானூர் ஊராட்சி தலைவர் துர்காதேவி, காரணி ஊராட்சி தலைவர் பத்மாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டமைப்பின் இணை செயலாளராக பன்பாக்கம் ஊராட்சி தலைவர் கே.எஸ்.சீனிவாசன், நத்தம் ஊராட்சி தலைவர் கலைமதி, மெதிப்பாளையம் வள்ளியம்மாள், சூரப்பூண்டி வாணிஸ்ரீ பாலசுப்பிரமணியம், பல்லவாடா லட்சுமி பன்னீர் செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 21 ஊராட்சி மன்ற தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 2016 முதல் 2020 வரை 61 ஊராட்சிகளுக்கும் நிலுவையில் உள்ள 60 கோடிக்கு மேல் நிதியை மாவட்ட கலெக்டர் உடனடியாக வழங்க வேண்டும். ஊராட்சிகளில் மத்திய மாநில அரசு நிதிகளில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள் கட்ட தேவையான மணல் மற்றும் சவுடு மணலை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் ஊராட்சிகளின் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : panchayat leaders ,
× RELATED கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம்...