×

சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு குறும்படம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்


திருப்பூர், மார்ச். 5: சாலை விதிகள் குறித்து சிறந்த குறும்படத்தை தயாரித்து வெளியிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு, கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பள்ளி  மாணவர்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, பள்ளிகள் தோறும் சென்று, போக்குவரத்து அதிகாரிகள், மாணவர்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சிறப்பாக செயல்படும் மாணவர் குழுக்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் காரணம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், பள்ளி தலைமை ஆசிரியை விண்ணரசி மற்றும் ஆசிரியை அமலா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, ‘விதிகளை மதி’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதில், சாலை விதிகளை கடைபிடிக்காமல் வாகனங்களை இயக்கினால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கியிருந்தனர். இந்த குறும்படம், அனைத்து தரப்பினரிடையே பாராட்டை பெற்றது.  குறும்படத்தை தயாரித்த 13 மாணவ-மாணவியரை பாராட்டும் வகையில், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில், தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம், முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், போக்குவரத்து ஆய்வாளர்கள் சித்ரா, சிவக்குமார், தலைமை ஆசிரியை விண்ணரசி, ஆசிரியை அமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : government school students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன்...