×

சர்வதேச வர்த்தக ஜவுளிக்கண்காட்சி இன்று துவக்கம்

திருப்பூர், மார்ச் 5: திருப்பூர்  தொழில் பாதுகாப்பு குழு இந்திய அரசின் சிறு, குறு நடுத்தர வளர்ச்சி  நிருவனம் ஆகியவை இணைநது 3 நாள் ஜவுளி வர்த்தக கண்காட்சி இன்று துவங்குகிறது. இது குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர வளர்ச்சி  நிறுவனம் சுரேஷ்பாபுஜி, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு டாக்டர்  மோகனசுந்தரம் ஆகியோர் கூறியதாவது:- இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும்  நடுத்தர பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் வளர்ச்சிக்காக மத்திய  அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிறுவனம், திருப்பூர் தொழில்  பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து திருப்பூர் அவிநாசி ரோடு பழங்கரை ஐ.கே.எப்.  வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று முதல் வரும் 7ம் தேதி வரை காலை 10  மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.  சிறு, குறு பின்னலாடை  உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவனத்தில் உற்பத்தியாகும் ஆடைகளின் வகைகளை  வியாபாரிகள், பையர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்துகின்றனர். பின்னலாடை  உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள், இயந்தரங்களின் தயாரிப்பு  நிறுவனங்கள் தங்களுடைய பல்வேறு வகையான மிஷின்கள்,  சாய ஆலை நிறுவனங்கள், பிரிண்டிங் நிறுவனங்கள் என 500க்கு மேற்பட்ட  நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர்.  இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து உள்நாட்டு வியாபாரிகள், வெளிநாட்டு பையர்கள்  பலர் கலந்துகொள்கின்றனர்.

கண்காட்சி துவக்க விழாவிற்கு சபாநாயகர் தனபால்,  சிறு, குறு தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், கால்நடைத்துறை அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன், ஏஇபிசி தலைவர் சக்திவேல், திருப்பூர் எம்.பி.சுப்ராயன்,  சிறப்பு செயலாளர் ராம்மோகன்மிஸ்ரா, முதன்மை செயலாளர் ராஜேந்தரகுமார்,  மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா  சண்முகம், இயக்குனர் சுரேஷ்பாபுஜி உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.3  நாட்களிலும் பின்னலாடை உற்பத்தி, வர்த்தகம் ஆகியவை குறித்து கருத்தரங்குகள்  நடக்கிறது. பல்வேறு மாநிலங்களைச்சார்ந்த பின்னலாடை உற்பத்தியாளர்கள்  கலந்துகொண்டு வியாபாரத்தை அதிகரித்துக்கொள்ளவும். தொழில் முனைவோர்கள்,  புதிய தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு புதிய தொழில் நுட்பங்களை  அறிந்துகொள்ளவும் பயன் உள்ளதாக அமையும். கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : International Trade Showcase ,
× RELATED கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது