×

அன்னூரில் 7ம் தேதிதனியார்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி

கோவை, மார்ச்.5: கோவை மாவட்டம் அன்னூர் கே.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 7ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி   நடக்க உள்ளது
இது குறித்து கலெக்டர் ராஜாமணி தெரிவித்திருப்பதாவது:-கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு வளாகத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும் வேலையற்ற இளைஞர்கள் பயன்பெறும் வண்ணம் வரும் 7ம் தேதி அன்னூர் கே.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி  நடக்க உள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம். இவ்வாறு ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Tags : Annur ,
× RELATED 1989ம் ஆண்டு மாநாட்டில் நான் பேசும்போது...