×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 20வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்

தண்டையார்பேட்டை:  வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் 20வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, கடந்த 14ம் தேதி வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் முஸ்லிம்கள் போராட்டம் தொடங்கினர். நேற்று 20வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று டெல்லியில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்  இறந்தவர்களுக்கு  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் மண்ணடி, தண்டையார்பேட்டை நேதாஜி நகர் ஆகிய பகுதிகளிலும் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தெடர்ந்து இரவு பகல் பார்க்காமல்  குழந்தைகள், பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறுகையில்,  “சட்டப் பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம்  நிறைவேற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றனர்.

Tags : Muslims ,
× RELATED நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை...