×

ஊரக உள்ளாட்சிகளில் 51 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு

சென்னை: ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 51 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 27 மாவட்டங்களில் மட்டும் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 102 இடங்களுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெறுகிறது. போதிய உறுப்பினர்களின் வருகை இல்லாத காரணத்தால் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு வருகை பதிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக 5 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் நடைபெற்ற 6 இடங்களில் அதிமுக 5 இடங்களிலும் திமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கு வருகை பதிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக 13 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் நடைபெற்ற 5 இடங்களில் திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், பாமக ஒரு இடத்திலும், சுயேட்சைகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு 31 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறவில்லை. மீதம் உள்ள 40 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட 102 பதவிகளில் 51 பதவிகளுக்கு மட்டுமே மறைமுக தேர்தல் நடைபெற்றது. 51 பதவிகளுக்கு தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : elections ,localities ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு