×

கன்னியாகுமரியில் 1000 கோடியில் சிறப்பு திட்டங்கள் சுற்றுலா துறை இயக்குநரிடம் வசந்தகுமார் எம்.பி பரிந்துரை

நாகர்கோவில், மார்ச் 5: குமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் a1000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தொடர்பாக வசந்தகுமார் எம்.பி மத்திய சுற்றுலாத் துறை பொது இயக்குநர் மீனாட்சி சர்மாவிடம் பரிந்துரைகளை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:குமரி மாவட்டம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பன்னாட்டு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதனால் அரசுக்கு பெருமளவில் வருமானம் வருகிறது. கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டில் 2.2 கோடி மக்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். மதுரைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும், மேலும் கேரள மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளும் தவறாமல் கன்னியாகுமரி வந்து செல்கின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் கன்னியாகுமரியில் பரிதாப நிலையில் உள்ளன.எனவே சுற்றுலா மேம்பாட்டு நிறுவன கிளை ஒன்றை கன்னியாகுமரி அமைத்து பயணிகள் விடுதி அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு உதவ ஆலோசனை கூடம், கடற்கரை மற்றும் கடலோர பகுதிகளை மேம்படுத்துதல், கன்னியாகுமரியை தேசிய சுற்றுலா சுற்றில் இணைத்தல், வட்டக்கோட்டை, சாமித்தோப்பு மற்றும் சுசீந்திரம் மார்க்கமாக மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரிக்கான ஒரு புதிய தேசிய சுற்றுலா சுற்று ஒன்று அமைத்தல், சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியை முற்றிலும் கண்டுகளிக்க ஏதுவாக பேட்டரி கார் வசதி ஏற்படுத்துதல் வேண்டும்.

மேலும் கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் ரயில் நிலையம் அருகாமையிலும் ஹைடெக் கழிவறைகள் அமைக்க வேண்டும். தமிழகத்தின் தற்காப்பு கலை, தமிழ் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் இயல் இசை கூடம் அமைக்க வேண்டும். காமராஜர் திருவுருவ சிலை ஒன்றை திருவள்ளுவர் சிலை அருகே அமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் புனித தலங்களுக்கும் ஐடிடிசி மூலம் சுற்றுலா தொகுப்பு ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும். பொழுதுபோக்கு பூங்கா, நீர் சறுக்கு விளையாட்டு மற்றும் படகு பயணம் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி நிலையம், குழந்தைகள் பாதுகாப்பு வீரர்கள் அணி, உதவி மையம் ஏற்படுத்துதல் அவசியம். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் கன்னியாகுமரியின் பெருமைகள் மற்றும் சுற்றுலா திறன்கள் பற்றியும் அந்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முக்கடல்களும் சந்திக்கும் கன்னியாகுமரியில் ‘கேட் வே ஆப் இந்தியா’ ஒன்றை உருவாக்க வேண்டும். ஆயிரம் அடி உயர கொடி கம்பத்தில் இந்திய தேசிய கொடியை பறக்கவிட வேண்டும். விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே சென்று வர ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் போன்ற திட்டங்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றியமைக்க a1000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Vasanthakumar ,tourism department ,Kanyakumari ,
× RELATED 21 முதல் சித்திரை சுற்றுலா கலை விழா