×

தக்கலை, மண்டைக்காடு திருவிழாக்கள் மார்ச் 9, 10ம் தேதிகளில் குமரிக்கு உள்ளூர் விடுமுறை அரசு தேர்வுகளுக்கு இடையூறின்றி கல்வி நிறுவனங்கள் இயங்கும்

நாகர்கோவில், மார்ச் 5: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:குமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர்முகம்மது சாகிப் ஒலியுல்லாஹ் (ராலி) ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 9ம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மாசிக்கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. மார்ச் 9ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே மாதம் இரண்டாவது சனிக்கிழமையான மே 9ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

மார்ச் 10ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜூன் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை ஜூன் 13ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். மார்ச் 9, 10 குமரிமாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் வகையில் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும். அரசு பள்ளிகல்வித் துறை சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசு தேர்வுகளுக்கு எவ்வித இடையூறுமின்றி கல்வி நிறுவனங்கள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kumari ,festivals ,institutions ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...