×

அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி டிஜிட்டல் பேனர்

இடைப்பாடி, மார்ச் 4: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இடைப்பாடி வருவதையொட்டி, அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க பட்டியலை அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் அமைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம், ₹565 கோடியில் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இடைப்பாடி அடுத்த இருப்பாளி, மேட்டுப்பட்டி ஏரியில் இன்று(4ம் தேதி) காலை நடக்கிறது. நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 100 ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்து பேசுகிறார். முதல்வர் வருகையையொட்டி, இடைப்பாடி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரது 3 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வைக்கப்பட்டுள்ள பேனரை ஒன்றியக்குழு தலைவர் குப்பம்மாள் மாதேஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிராஜூதீன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராணி முத்துக்கண்ணு ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ.) சுஜாதா, மாவட்ட கவுன்சிலர் சம்பூரணம் மாதேஸ்வரன் மற்றும் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பார்வையிட்டனர்.

Tags : government ,AIADMK ,
× RELATED அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...