×

சேலத்தில் காற்று மாசு குறித்து ஆய்வு

சேலம், மார்ச் 4: சேலத்தில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதா? என மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல், சென்னை, மும்பை, உள்ளிட்ட இதர நகரங்களில் காற்று மாசு ஏற்படுகிறதா என மாசுக்கட்டுபாடு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சேலத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் புகை சூழ்ந்து இருக்கிறது. இதனை பைபாஸ் சாலை பகுதிகளில் காணமுடிகிறது. இதனிடையே சேலத்தில் காற்று மாசை அளவிட  ஜங்சன் மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில்  ‘ரெசிபிள் டஸ்ட் சேம்லர்’ கருவி பொருத்தி கணக்கிடப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட காற்றின் அளவு, 100 மைக்ரோ கிராம், கன மீட்டர். தொடர்ந்து, கணக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில்,100 மைக்ரோ கிராம் கன மீட்டருக்கு குறைவாக 65, 70 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் காற்றில் மாசு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து  அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலத்தில் தனியார் கல்லூரியில் 24 மணி நேரமும் காற்றின் தரம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கணக்கீடு செய்யப்பட்டதில், 65, 70 மைக்ரோ கிராம் கன மீட்டர்  என காற்றின் தரம் இருந்தது.  தொழிற்சாலை, வாகனத்தில் இருந்து அதிக அளவில் வெளி வரும் புகையால் காற்று மாசு அடைகிறது.  இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

Tags : Salem ,
× RELATED சீரமைக்கப்படும் மேம்பால சாலை பணிகள்: எம்எல்ஏ, எம்பி ஆய்வு