×

சூளகிரியில் சுகாதார பூங்காவை சேர்மன் ஆய்வு

சூளகிரி, மார்ச் 4:சூளகிரி வட்டார மருத்துமனை வளாகத்தில் ₹4.80 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார பூங்கா மற்றும் சூளகிரி சந்தையில் ₹40 லட்சத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம் உள்ளிட்டவை இன்று(4ம்தேதி) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது. போலுப்பள்ளிக்கு வருகை தர உள்ள முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் சுகாதார பூங்கா, சந்தை வளாகத்தை திறந்து வைக்க உள்ளார். இதை நேற்று சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழு சேர்மன் லாவண்யா ஹேமநாத் ஆய்வு செய்தார். அப்போது, பிடிஓக்கள் விமல் ரவிக்குமார், பாலாஜி, பொறியாளர் மணிவண்ணன் உடனிருந்தனர்.

Tags : health park ,
× RELATED தலைவருக்கு தெரிவிப்பதுபோல் துணை...