×

தீரன்சின்னமலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஊத்தங்கரை, மார்ச் 4: ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. இந்த அறிவியல் கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், இந்தி, கணிதம், சமூக அறிவியல், கணினி உள்ளிட்ட துறை சார்ந்த படைப்புகளும் இடம்பெற்றது. தலைமையாசிரியர்கள் பற்குணன், தெய்வம், நாகராசன் ஆகியோர் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டு படைப்புகளை தேர்வு செய்தனர்.  இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரசன்னமூர்த்தி, செயலர் தங்கராஜ், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

Tags : Science Exhibition ,Theerancinnamalai School ,
× RELATED வத்திராயிருப்பு பள்ளியில் அறிவியல் கண்காட்சி