×

பள்ளி மாணவர்களுக்கு வளரி கலை பயிற்சி

ஓசூர், மார்ச் 4: ஓசூர் அதியமான் கல்லூரியில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வளரிக்கலை பயிற்சியளிக்கப்பட்டது. தமிழர்கள் போரில் எதிரிகளை வீழ்த்த சிலம்பம், வாள்சண்டை, வளரி உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயன்படுத்தினர். இந்த போர்க்கலைகளின் மூலம் பல ராஜ்ஜியங்களை வென்றனர். தற்போது வளரி உள்ளிட்ட போர்க்கலைகள் அழிந்து வருகின்றன. பாரம்பரிய போர்கலைகளை அழிவின் விழிம்பில் இருந்து மீட்டு, அவற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து, தமிழர்களின் போர் கலைகளை உலகம் அறிந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்களுக்கு வளரி தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை ஓசூர் டிஎஸ்பி சங்கு துவக்கி வைத்தார். பயிற்சியில் 8 முதல் 40 வயது வரை உள்ள மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வளரியில் இலக்கை தாக்கும் வளரி மற்றும் இலக்கை தாக்கி விட்டு, திரும்பும் வளரி என இரண்டு வகைகள் உள்ளது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


Tags : school children ,
× RELATED கொரோனாவை விரட்ட விதவிதமான...