×

தர்மபுரி அருகே சம்பங்கி பூ விளைச்சல் அமோகம்

தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரி அருகே பிடமனேரி பகுதியில் சம்பங்கி பூ விளைச்சல் அமோகமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி, செவ்வந்தி, பட்டன்ரோஸ், அரளி, குண்டு மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் பயிரிடப்படுகின்றன. சம்பங்கி மலர்கள் சுவாமி கும்பிட, திருமணம் உள்ளிட்ட வைபவங்களுக்கு உற்பத்தி செய்யப்படும். மாலைகளில் முக்கிய இடம் பெறுவதால் சம்பங்கி பூவிற்கு எப்போதும் கிராக்கி அதிகமாக இருக்கும். தர்மபுரி மாவட்டத்தில் சம்பங்கி பூ, பென்னாகரம், தர்மபுரி, நல்லம்பள்ளி தாலுகாக்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி அருகே பிடமனேரி பகுதியில் 100க்கணக்கா ஏக்கரில், சம்பங்கி பூ பயிரிடப்பட்டுளளது. இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் தர்மபுரி, ஓசூர் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags : Dharmapuri ,
× RELATED தர்மபுரியில் அறுவடை தாமதத்தால்...