×

காரிமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

காரிமங்கலம், மார்ச் 4: காரிமங்கலம் மேற்கு ஒன்றியம் சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மகேந்திரமங்கலம் ஊராட்சியில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்விடி கோபால் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன், முன்னாள் யூனியன் துணை சேர்மன் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி கட்சி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் குமார், மாதையன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ஓபுளி மாரியப்பன், கிருஷ்ணன், முன்னாள் தலைவர் குப்புராஜ், துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் துணைத்தலைவர் ராஜப்பன், பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MK Stalin ,Birthday Celebration ,
× RELATED சொல்லிட்டாங்க...