×

வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தர்மபுரி, மார்ச் 4: திரௌபதி திரைப்படம் தொடர்பாக பொம்மிடியை சேர்ந்த வாலிபரை தாக்கிய போலீசார் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபரின் உறவினர்கள் நேற்று எஸ்பியிடம் புகார் மனு கொடுத்தனர்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மல்லாபுரம் வினோபாஜி தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தர்மபுரி எஸ்பி ராஜனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 28ம் தேதி தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள ஒரு தியேட்டரில், திரௌபதி திரைப்படம் வெளியிடப்பட்டது.  திரௌபதி படத்தை திரையிடக்கூடாது என நடந்த தர்ணா போராட்டத்தின் போது, ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக பொம்மிடி போலீசார் 14 பேரை கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு வினோபாஜி தெருவை சேர்ந்த சேட்டு என்ற சத்தியராஜை, பொம்மிடி போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சேட்டை போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த சேட்டு, 2ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே சேட்டுவை சட்ட விரோதமாக தாக்கிய போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது