×

திருச்சி மாவட்டத்தில் 11 கிராமங்களில் சிறப்பு குறைதீர் முகாம்

திருச்சி, மார்ச் 4: திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் 11 கிராமங்களில் சிறப்பு குறைதீர் முகாம் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது.திருச்சி மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, நிலம் சம்பந்தமான பிரச்னைகள் அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் வாழும் கடைகோடி மக்களுக்கும் அதிகமான அரசு சேவைகளை பெறும் வகையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.திருச்சி மாவட்டத்தில் வரும் 6ம் தேதி 11 வட்டத்திலுள்ள கிராமங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. திருச்சி(கிழக்கு)-சிந்தாமணி, திருச்சி(மேற்கு)-பிராட்டியூர்(கிழக்கு), திருவெறும்பூர்-கிருஷ்ணசமுத்திரம், ரங்கம்-நவலூர் குட்டப்பட்டு மற்றும் பெரியநாயகிசத்திரம், மணப்பாறை- முகவனூர் வடக்கு, மருங்காபுரி-செவந்தாம்பட்டி, லால்குடி-பெரியகுறுக்கை, மண்ணச்சநல்லூர்- மேல்பத்து, முசிறி-பிள்ளாப்பாளையம், துறையூர்-கோட்டப்பாளையம்(கிழக்கு), தொட்டியம்- நாகையாநல்லூர் உள்ளிட்ட 11 கிராமங்களில் தாசில்தார் முதலான வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக தீர்வு காணப்படும். எனவே, பொதுமக்கள் இம்முகாமினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : camps ,villages ,district ,Trichy ,
× RELATED பள்ளிகளில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமை...