×

பைக்கிலிருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

திருச்சி, மார்ச் 4: திருச்சி அடுத்துள்ள நாச்சிக்குறிச்சி இரட்டை வாய்க்கால் வாசன் நகரை சேர்ந்தவர் அசரப்ஷா(35). இவர் கடந்த 26ம் தேதி பைக்கில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஒத்தக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக்கிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து அவரது மனைவி ஜெரின் அளித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது