×

3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை

மண்ணச்சநல்லூர், மார்ச் 4: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியை சேர்ந்த அதிமுக பிரமுகரின் மளிகை கடையில் முகமூடி அணிந்து இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிக்குண்டை வீசி விட்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்(48). இவர் அதிமுக எம்ஜிஆர் மன்ற மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் திருப்பைஞ்சீலி கடைவீதியில் கோயில் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சோமசுந்தரம் மற்றும் அவரது மனைவி புஷ்பா ஆகிய இருவரும் மளிகை கடையில் வியாபாரம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது இரவு 7.30 மணியளவில் 2 பைக்குகளில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் திடீரென்று கடைக்குள் நாட்டு வெடிக்குண்டை வீசிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். மர்ம ஆசாமிகள் வீசிய நாட்டு வெடிகுண்டு கடை முன்பு இருந்த ஷோகேசில்பட்டு வெடித்தில் ஷோகேஸ் சேதமடைந்தது. இதில் சோமசுந்தரத்தின் மனைவி புஷ்பா காயமடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து ஜீயபுரம் டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு வீசிய நபர்களை அப்பகுதி மக்கள் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. எனவே அவர்கள் வேறு ஊரைச் சேர்ந்தவர்களா அல்லது கூலிப்படையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அங்கு கிடைத்த சிசிடிவி காட்சியில் வேகமாக பைக்கில் சிலர் தப்பி செல்லும் காட்சி மட்டுமே பதிவாகி உள்ளது. குண்டு வீசிய ஆசாமிகளின் அடையாளம் தெரியவில்லை. திருச்சி, மார்ச்.4: திருச்சி உறையூர், பாத்திமா நகரை சேர்ந்த மாணவி காயத்ரி, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனமும் இணைந்து நடத்திய தகுதி தேர்வில் சிறந்த திறனாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாசா சென்று விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள ஏதுவாக ஊக்கத்தொகை மாணவி காயத்ரிக்கு ரூ.75 ஆயிரத்திற்கான காசோலை மாவட்ட நலப்பணி நிதிக்குழு நிதியிலிருந்து கலெக்டர் சிவராசு வழங்கினா

Tags : Investigations ,Special Forces ,
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர்...