×

மக்கள் பிரதிநிதிகளுக்கு சிந்தனையில் மாற்றம் வேண்டும்

முத்துப்பேட்டை, மார்ச் 4: மக்கள் பிரதிநிதிகளுக்கு சிந்தனையில் மாற்றம் வேண்டும் என பயிற்சி பட்டறையில் பேராசிரியர் பழனித்துறை கூறினார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்று நடைபெற்றது. தமிழ் இலக்கிய மன்ற தலைவர் ராம்மோகன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் கஸ்தூரி செந்தில் முன்னிலை வகித்தார். முன்னதாக செயலாளர் நந்தகுமார் வரவேற்றார். பயிற்சி நோக்கம் குறித்து இலக்கிய மன்ற கவுரவ தலைவர் ராஜ்மோகன் பேசினார்.இதில் காந்தி கிராமம் கல்லூரி ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராட்சி இருக்கை பேராசிரியர் பழனித்துரை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்து பேசுகையில்,உள்ளாட்சி தேர்தலில் வென்று வருவது பெரிய விஷயம். அதே நேரத்தில் மக்கள் மத்தியில் பெயரெடுப்பதும் பெரிய விஷயம்தான். முதலில் தங்கள் பகுதி மக்களுக்கு என்ன தேவை சென்று அறிந்துக்கொள்ளள வேண்டும். நம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்ற சாத்தியக் கூறுகளை கண்டுபிடிக்க வேண்டும். தாங்கள் திட்டமிடுதல் அவசியம், கிராம பஞ்சாயத்துக்கு ஏராளமான அரசு நிதிகள் வரும். அந்த நிதிகள் வரும் வழியை மக்கள் பிரதிநிதிகளாகிய தாங்கள் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த நிதியை கொண்டு மக்கள் பணியாற்ற முடியும். அதேபோல் மக்கள் பிரதிநிதிகளாகிய தாங்கள் தற்போதைய சிந்தனையில் மாற்றம் வேண்டும். நடத்தையில், செயல்பாட்டில் மாற்றம் வேண்டும். அப்போதுதான் தொடரும் 5 ஆண்டுகளில் மக்கள் சேவையில் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதேபோல் உடலில் ஒழுக்கம் வேண்டும், மனத்தில் ஒழுக்கம் வேண்டும், செயல்பாட்டில் ஒழுக்கம் வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் மதிப்பிற்குரிய பிரதிநிதியாக வளம்வர முடியும் என்றார். இதில் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவி.ரெங்கசாமி மற்றும் ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : representatives ,
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்