×

மன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டையில் திவாகரன் இல்ல மணவிழா

மன்னார்குடி, மார்ச் 4: அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் டாக்டர் திவாகரன் இல்ல மணவிழா மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் டாக்டர் வினோதகன் அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர்.அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளரும், செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளையின் தாளாளருமான டாக்டர் திவாகரன், லதா திவாகரன் ஆகி யோரின் மகனும், அண்ணா திராவிடர் கழக மாநில மாணவரணி, இளைஞரணி செயலாளரும், போஸ் மக்கள் பணியக நிறுவன தலைவருமான ஜெயானந்த், சென்னை நீலாங்கரை வி. பாஸ்கரன், சுப ஆகியோரின் மகள் ஜெய ஆகியோரின் திருமண விழா நாளை (மார்ச் 5ம்தேதி) காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை கிராமத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் வினோதகன் அரங்கத்தில் நடை பெறுகிறது.இவ்விழாவில் அண்ணா திராவிடர் கழக மற்றும் போஸ் மக்கள் பணியகம் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Divakaran ,house wedding ,Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...