×

மகாமக குளத்தில் 8ம் தேதி மகா ஆரத்தி பெருவிழா காசியிலிருந்து ஆராதனை பொருட்கள் வருகை

கும்பகோணம், மார்ச் 4: கும்பகோணத்தில் அகில பாரதிய சன்னியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில் மாசிமகம் மகா ஆரத்தி பெருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது. கும்பகோணத்தில் வரும் 8ம் தேதி மாசி மகத்தன்று அகில பாரதிய சன்னியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில் நீர்நிலைகளை பாதுகாத்தல், பராமரித்தல், நன்றி தெரிவித்தல் தொடர்பான சொற்பொழிவு, கலந்துரையாடல், சத்சங்கம் ஆகியவை காசிராமன் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் சன்னியாசி சங்க தலைவர் பேரூர் ஆதீனம் அதிபர் சாந்தலிங்க மருதாச்சால அடிகள் தலைமை வகிக்கிறார். துணைத்தலைவர் ராமானந்தா சுவாமி முன்னிலை வகிக்கிறார்.மாலை 5 மணிக்கு சிவவாத்திய இசைக்கருவிகள், மங்கள வாத்தியம் முழங்க மகாமக குளத்தை தீர்த்தவலம் வரும் திருச்சுற்று நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள், துறவியர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று ஆரத்தி வழிபாடு செய்யவுள்ளனர்.

அப்போது குளத்தின் நான்கு கரைகளிலும் திரளானோர் அகல் தீபமேற்றி வழிபடுவர். கங்கையில் நடைபெறும் தீப மகாஆரத்தி போன்று மகாமக குளத்திலும் நடத்துவதற்காக அதற்குரிய பன்முங்கள் கொண்ட வெள்ளியிலான ரூ.2 லட்சம் மதிப்புள்ள தீப, தூப, ஆராதனை பொருட்கள் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் காசி முகாமிலிருந்து கும்பகோணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சங்க அறங்காவலர் யோகி சிவ பிரம்மானந்த சரஸ்வதி சுவாமி, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை குழுவினரிடம் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பொருட்களை ஒப்படைத்தார். அகில பாரதிய சன்னியாசிகள் சங்க துணைத்தலைவர் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமி, ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்த ஆனந்தா, தஞ்சை மண்டல பிரதிநிதி கோரக்கர் சுவாமி, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் வேதம் முரளி பங்கேற்றனர்.

Tags : Great Arathi Festival ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா