×

அரசு தலைமை மருத்துவமனையில் தரைகள் பெயர்ந்து கிடக்கும் அவலம்

கும்பகோணம், மார்ச் 4: கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே தரைகள் பெயர்ந்து கிடக்கிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் நாகை, திருவாரூர், அரியலூர், ஜெயங்கொண்டம், கடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினம்தோறும் சிகிச்சைக்காக 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனா். இதில் 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவு, 24 மணிநேர தாய்சேய் நலப்பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, எலும்பு முறிவு பிரிவு, கண், பல், பால்வினை நோய் பிரிவு, ரத்த வங்கி, தீப்புண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு தனித்தனியாக சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மாதம்தோறும் 200 சிசேரியன் அறுவை சிகிச்சை, 350 இதர பொது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல லட்ச ரூபாய் மதிப்பில் நவீன முறையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் மருத்துவமனையின் தரைப்பகுதிகள் பெயர்ந்து உடைந்து கிடக்கிறது. சிறிதாக சேதமடைந்த தரை பகுதியை உடனடியாக சரி செய்யாததால் தற்போது தரையில் பெரும்பாலான பகுதி பெயர்ந்து கிடக்கிறது. மேலும் தரையில் டைல்ஸ் கற்களை தரமான முறையில் அமைக்காததால் பல இடங்களில் தரைப்பகுதி ஒட்டாமல் எப்போது பெயருமோ என்ற நிலையில் உள்ளது. இதுபோன்ற நிலையால் நடக்க முடியாத நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் நடந்து செல்லும்போது பெயர்ந்துள்ள பகுதிகளில் கால் இடறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே குடந்தையில் செயல்படும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெயர்ந்துள்ள தரை பகுதியை விரைந்து சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.கண்டுகொள்ளாத அதிகாரிகள் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவு, 24 மணிநேர தாய்சேய் நலப்பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, எலும்பு முறிவு பிரிவு, கண், பல், பால்வினை நோய் பிரிவு, ரத்த வங்கி, தீப்புண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு தனித்தனியாக சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

Tags : Government Head Hospital ,
× RELATED கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கு