×

ஆற்றில் மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 4: பூதலூர் அருகே புதுஆற்றில் மணல் கடத்திய மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை கைது செய்ததுடன் 3 பேரை தேடி வருகின்றனர்.பூதலூர் அடுத்த சின்னகாங்கேயன்பட்டி புது ஆற்றில் சிலர் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது 4 பேர் மினி லாரியில் மணல் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 3 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மணல் கடத்துவதும், பிடிபட்டவர் காமதேவமங்கலம் மணிகண்டன் என்பதும், தப்பியோடியவர்கள் அய்யனாபுரம் கருப்பு (எ) சதீஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் செல்வராஜ் என்பதும் தெரியவந்தது. பின்னர் லாரியை பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.மாட்டு வண்டி பறிமுதல்:
 திருவையாறு அடுத்த ராயப்பேட்டையை சேர்ந்தவர் மதியழகன் (30). இவர் ராயப்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றி கொண்டு வந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து திருவையாறு காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : river ,
× RELATED குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மணல்...