×

சீன - ரஷ்ய ரயில் போக்குவரத்து

சீனவின் பீஜிங் - ருஷ்யாவின் மாஸ்கோ மற்றும் பீஜிங் - சிட்டா இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் போக் குவரத்தை ரஷ்ய நாடு கடந்த பிப்ரவரி 3 ம் தேதி நிறுத்தியது. அதே நேரம் சரக்கு ரயில் போக்குவரத்தை சீனாவுடன் தொடர்கிறது.கடந்த ஜனவரி 30 ம் தேதி இதனையும் நிறுத்த ரஷ்ய ரயில் இயக்குரகம் முடிவு செய்து இருந்த தாகவும், அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக தலையிட்டால் சரக்கு போக்கு வரத்து மட்டும் சீனாவுடன் தொடர்வதாகவும் ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மங்கோலியா வழி சீன ருஷ்ய ரயில் பாதை பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமே தற்போது மூடப்பட்டு இருக்கிறது. சீன ரயில்வே கழகத்தின் ஆண்டு நிகர லாபம் 2.045 டிரில்லியன் யுவான். போக்குவரத்து துணை அமைச்சர் லியூ சியோமிங் சீனாவில் பயணிகள் போக் குவரத்து 28.8 சதவீதம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்து இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். ஆண்டுக்கு 3.813 பில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை சீன ரயில்வே கையாள்கிறது. நிலைமை சீரடைய 3 மாதங்கள் ஆகலாம். ஆனாலும் கூட கொரோனா வைரஸ் சீன ரயில்வேக்கு ஏற்படுத்த போகும் வருவாய் இழப்பு சுமார் ஒரு லட்சம் கோடி யுவான் ஆகும்.இவ்வாறு மனோகரன் கூறினார்.

Tags : Chinese ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...