×

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 1072 பேருக்கு வேட்டி, சேலை

ஊத்துக்கோட்டை , மார்ச் 4: ஊத்துக்கோட்டையில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பா.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.ரூர் செயலாளர் ஷேக்தாவுத், ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் அம்மினி மகேந்திரன், ஒன்றிய குழு துணைத்தலைவர் சுரேஷ், அவைத்தலைவர் அருணாச்சலம், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாகிகள் கூட்டுறவு சங்க தலைவர்கள்  தர் , பிரஸ்.மணி, சக்திவேல், சுப்பிரமணி , செல்வராஜ், ஜெகன், அப்புன், சீனிவாசன், முருகேசன், பாபா, ஜெய்தூண்பீ அப்பாஸ், என்.பி.கே.சுரேஷ், இளவரசி சுரேஷ், தீபராணி சரவணன், மோகன், மோகன கிருஷ்ணன், சுகுமார் , பெரம்பூர் ரஜினி ஆகியோர் வரவேற்றனர்.சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர்கள் மூவேந்தன் , கோபிநாத் ஆகியோர் சிறப்புரையாற்றி 1072 பேருக்கு வேட்டி, சேலை என நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் குழந்தைவேல், லதா அசோக், சரவணன், வித்யாலட்சுமி வேதகிரி, ஊத்துக்கோட்டை நிர்வாகிகள்  ஜோதிராமலிங்கம் , ஜாலி பெருமாள், அம்பலவாணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  இறுதியில் ஏ.முகம்மது சித்திக் நன்றி கூறினார்.

Tags : Jayalalithaa Birthday ,
× RELATED ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 1000 பெண்களுக்கு சேலை