×

அங்கம்பாக்கம் அரசு பள்ளியில் முப்பெரும் அறிவியல் திருவிழா

காஞ்சிபுரம், மார்ச் 4: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் அரசு பள்ளியில் முப்பெரும் அறிவியல் திருவிழா நடந்தது.காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் பள்ளியில் தேசிய அறிவியல் தினம், ஆக்கத்திற்கான அறிவியல் கண்காட்சி, கொல்கத்தா பன்னாட்டு அறிவியல் திருவிழாவில் பங்கேற்று சிறப்பித்த மாணவர்களுக்கு பாராட்டுவிழா என முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் தணிகை அரசு தலைமை தாங்கினார். கணித ஆசிரியை லதா வரவேற்றார். காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அலுவலர் மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆக்கத்திற்கான அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து 80க்கும் மேலான காட்சிப் பொருள்களை பார்வையிட்டு மாணவர்களிடம் விளக்கங்களை கேட்டார்.
அப்போது, பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் சார்ந்த விளக்கங்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனி ஆகியோர் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் தி.சேகர் செய்தார். ஆசிரியர்கள் கலைவாணன், பொற்கொடி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இறுதியாக ஆசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார்.

Tags : Big Science Festival ,Angambakkam Government School ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...