×

காஞ்சி, செங்கை ரவுடிகள் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம், மார்ச் 4: காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட  5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுதாகர் (23). பிரபல ரவுடி. இவர் மீது காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன.இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் பாலுசெட்டிசத்திரம் போலீசார், ரவுடி சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், டிஎஸ்பி கலைச்செல்வன் ஆகியோர் தொடர் குற்ற சம்பவங்களில் ரவுடி சுதாகரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம்  எஸ்பி சாமுண்டீஸ்வரியிடம் கோரிக்கை வைத்தனர். இதனை எஸ்பி, கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர், ரவுடி சுதாகரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கனா ஆணையை பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், வேலூர் மத்திய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் வழங்கினார்.

செங்கல்பட்டு: மறைமலைநகர் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்தது. இதுெதாடர்பான மர்மபர்களை கைது செய்ய எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மறைமலைநகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 4 பேரை, போலீசார் பிடித்தனர். விசாரணையில், உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தை சேர்ந்த எழிலரசன் (30), காட்டாங்கொளத்தூர் பூச்சி (எ) ரத்தினசபாபதி (25), குட்டி (எ) முருகன் (27), குன்றத்தூர் காவனூர் விமல் (27) என தெரிந்தது.மேலும் விசாரணையில், கடந்த 3 மாதமாக அதே பகுதியில் உள்ள கடைகள், வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நகை, பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார்.

Tags : persons ,Kanchi ,Chengai ,
× RELATED மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி