×

மது அருந்த பணம் தர மறுத்ததால் மனைவியை அடித்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் சிறை

சென்னை: குடிக்க பணம் தர மறுத்த மனைவியை அடித்து கொன்ற கட்டிட தொழிலளிக்கு, ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தாம்பரம் அடுத்த மேடவாக்கம் வெள்ளைக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கண்ணம்மாள் (60). ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், இவர் தினமும் குடித்துவிட்டு வந்து, வீட்டில் தகராறு செய்வார். அப்போது கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்படும். இதையொட்டி, கடந்த 27.10.2015 அன்று, இரவு மது குடிப்பதற்காக ராஜேந்திரன், மனைவிடம் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு கண்ணம்மாள், தன்னிடம் பணம் இல்லை என கூறி மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அருகில் இருந்த இரும்பு கடப்பாறையால் கண்ணம்மாளின் தலையில் சரமாரியாக தாக்கினார். அதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். புகாரின்படி பள்ளிகரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன், முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சிகள் மற்றும் ஆதராங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சீதாலட்சுமி ஆஜரானார்.

Tags : prison ,
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...