×

ஆணையர் அதிரடி பள்ளி மாணவர்கள் மேற்படிப்பு தேர்ந்தெடுக்க கல்வியாளர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்

திருமயம்,மார்ச்4: அரிமளம், திருமயம் பகுதிபள்ளிமாணவர்கள் திறமைகேற்ற,எதிர்காலவேலைவாய்ப்புதர கூடியமேற்படிப்பைதேர்ந்தெடுக்கஅப்பகுதியில் உள்ளஒவ்வொருபள்ளியாககல்வியாளர்கள் சென்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாஒருபேரூராட்சி, இரண்டுஒன்றியம், 65 கிராமபஞ்சாயத்து, 400க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது. இங்குள்ளமக்களின் முக்கிய வாழ்வாதரமாக விவசாயம் உள்ளது. அனைத்துகிராமமும் வானம் பார்த்தபூமிஎன்பதால் மழைபெய்தால் மட்டுமே விவசாயம் இல்லையேல் கூலிவேலைதான். இந்நிலையில்கடந்தசிலஆண்டுகளாக கூலிவேலையும் திருமயம் தாலுகாவில் கிடைப்பதில்லை. இதனால்கூலிவேலைக்காகஅருகிலுள்ளமதுரை,சிவகங்கை,திருச்சிஆகியமாவட்டங்களுக்கு சென்றுவருகின்றனர். தற்போது திருமயம் தாலுகாவில் நிலவிவரும் வரலாறுகாணாதகடும் வறட்சிஅப்பகுதிமக்களைபெரும் சிரமத்திற்குஉள்ளாக்கிவருகிறது. இதனால் அப்பகுதிமக்கள் அன்றாடவாழ்க்கையைகடத்துவதற்கேபெரும் சிரமப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகள் இல்லாதவகையில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பெற்றோர்களிடையே குழந்தைகளை படிக்க வைப்பதில் அதிகஆர்வம் காட்டிவருகின்றனர். இதற்குகாரணம் தான் படிக்காமல் கூலிவேலைக்குஅலைவதுபோலதனதுவருங்காலசந்ததிகள் அலைய கூடாது என்பதற்காக பெற்றோர்கள் குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். இதனால் தங்களதுகுழந்தைகளின் தொடக்க கல்வியை சொந்த கிராமங்களில் முடிக்க செய்து உயர் கல்விக்காக அருகிலுள்ள பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

அப்பள்ளிகளில் உயர்கல்வி முடிக்கும் குழந்தைகள் மேற்படிப்பைதொடருவதில் எதைபடித்தால் வேலைகிடைக்கும் என ெ தரியாமல் குழம்பிபோய் உள்ளனர். மேலும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிஎன்பதால் திருமயம் பகுதிபெற்றோர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்புதரும் மேற்படிப்பு பற்றி தொிவதில்லை. இதனால் சென்னை,திருச்சி,மதுரைஉள்ளிட்டபெருநகரங்களில் உள்ள வேலைவாய்ப்புகல்வி,சலுகைகள் மாணவர்களுக்குதொியாமல் ஏதாவது ஒரு மேற்படிப்பை படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் வெட்டியாகஊரைசுற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகாித்தபோதிலும் வேலைவாய்ப்பு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் இளைஞர்கள்,பெற்றோர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

மேலும் பெற்றோர்கள் கஷ்டபட்டு மேற்படிப்பு படித்த தனது குழந்தை வேலைவாய்ப்பின்றி இருப்பதை பார்த்து மனஉளைச்சலடைகின்றனர். ஒருசிலர் இங்கு படித்த படிப்புக்கு வேலைவாய்ப்பு இல்லாததை அறிந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனிடையே தற்போது மாணவர்கள் அரசுபொதுத்தேர்வை எழுதி வருகின்றனர்.எனவே திருமயம்,அரிமளம் பகுதியில் உள்ளஒவ்வொருஅரசுபள்ளிக்கும் கல்வியாளர்கள் சென்று பள்ளி படிப்பை முடித்து மேற்படிப்பு செல்லும் மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி எதிர்காலத்தில் வேலைவாய்ப்புதரும் படிப்பை படிக்க அரிமளம், திருமயம் பகுதி கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்பதேஅப்பகுதிபெற்றோர்களின் எதிர்பார்ப்பாகஉள்ளது.
இது பற்றிஅரிமளத்தைச் சேர்ந்த ஒரு மாணவரின் பெற்றோரிடம் கேட்டபோது: 2000ம் ஆண்டுகளில் கேட்டாிங் பிரபலமானது. இதனால் மாணவர்கள் கேட்டாிங் கல்வி நோக்கி சென்றனர்.
இதனைபயன்படுத்திகொண்டதனியார்கல்விநிறுவனங்கள் ஆங்காங்கேகேட்டாிங் இன்ஸ்டியூட் திறந்துமாணவர்களை சேர்த்தனர்.12ம் வகுப்பில் அதிகமதிப்பெண் எடுத்தாலும் அரசுபள்ளிமாணவர்கள் பொறியியல் படிப்பைதான் படிக்க வேண்டிஉள்ளது. இதற்குஏன் கஷ்டபட்டுபடிக்கவேண்டும் என்றமனநிலைக்கு வந்துவிட்டனர். நீட் தேர்வில் வெற்றிபெறஅரசுபயிற்சிவகுப்புகள் நடத்தினாலும் அவைகள் தனியார்பயிற்சிவகுப்புகளுக்கு இணையாக இல்லை எனமாணவர்கள் குற்றம் சாற்றுகின்றனர். தனியார்நீட் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களைஅனுப்புஎங்கள் கிராமப்புறபெற்றோர்களுக்குவசதியில்லை. இதனால் 12ம் வகுப்புமாணவர்களிடையே படிப்பின் மீதுள்ளஆர்வம் குறைந்துள்ளதுஎன்றார். எனவேமாணவர்களின் பள்ளி படிப்பு அறிவை வளர்ப்பதற்கும், பட்டபடிப்பு வாழ்க்கைக்கு தேவையானவேலைவாய்ப்புதரும் கல்வியாக இருக்கஅரசுஉறுதிசெய்யவேண்டும். இல்லையென்றால் மேற்படிப்பு படித்த கிராமப்புற மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றார்.

Tags : Commissioners of Action ,schoolchildren ,
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு