×

அன்னவாசல் அருகே குடுமியான்மலை வேளாண்கல்லூரி என்எஸ்எஸ் முகாம் நிறைவு விழா

இலுப்பூர்,மார்ச்4: அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை வேளாண்மை கல்லூரிமற்றும் வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா நேற்று நடைபெறற்து. அன்னவாசல் அருகே உள்ள ஏற்ப்பு கிராமம் குடுமியான்மலையில் கடந்த 26ம் தேதி துவங்கிய நாட்டு நலப்பணி திட்ட முகாம் நேற்று 3ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான துவக்கவிழா கடந்த 26ம் தேதி குடுமியான்மலையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரிமுதல்வர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுகன்யாகண்ணா வரவேற்றார். விழாவில் சமுதாய கூட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை கல்லூரிமுதல்வர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற முகாமில் சுற்றுச்சூழல், குழந்தைகள் கல்வி, மகளிர் பாதுகாப்பு,மழைநீர் சேகாிப்பு போன்றவைகள் குறித்த விழிப்புணர்வு பேரணிகள், வேளாண் தொழில் நுட்ப உரைகள், மக்கள் நலம்காக்கும் நலக்கல்வி, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்கள், மண்பாிசோதனை முகாம்கள். கோயில் வளாகம்.பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பொருள்களை அகற்றுதல் போன்ற சமுதாய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முகாம் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.குடுமியான்மலை வேளாண்மை கல்லூரிமற்றும் வேளாண்மை ஆராய்ச்சி மைய முதல்வர் சிவசுப்பிரமணியம் சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

விழாவில் குடுமியான் மலை ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுகன்யாகண்ணா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். மாணவர்களின் பள்ளி படிப்பு அறிவை வளர்ப்பதற்கும், பட்டபடிப்பு வாழ்க்கைக்கு தேவையானவேலைவாய்ப்புதரும் கல்வியாக இருக்கஅரசுஉறுதிசெய்யவேண்டும். இல்லையென்றால் மேற்படிப்பு படித்த கிராமப்புற மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

Tags : Closing Ceremony ,NSS Camp ,Kurumiyanmalai ,Annavasal ,
× RELATED யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க...