×

மின்கம்பி உரசியதால் தீ விபத்து டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் சாம்பல்

தா.பழூர், மார்ச் 4: தா.பழூர் அருகே மின்கம்பி உரசியதால் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலக்குடிகாடு கிராமத்தில் செல்வம் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் வைக்கோல் கட்டுகளை ஏற்றி கொண்டு அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஓட்டி சென்றார். தாதம்பேட்டை கிராமத்தில் சென்றபோது தாழ்வான மின்கம்பியால் வைக்கோல் உரசி தீப்பற்றியது. இது தெரியாமல் டிராக்டரை ராஜசேகர் ஓட்டி சென்றார். பெருமாள் கோவில் அருகில் சென்றபோது வைக்கோல் தீப்பற்றி எரிவதாக பொதுமக்கள் கூச்சலிட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ராஜசேகர் அதிர்ச்சியடைந்து டிராக்டரில் இருந்து வைக்கோலை சாலையிலேயே கொட்டி விட்டார். இதனால் டிராக்டர் டிப்பருக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் ரூ.4,000 மதிப்புள்ள வைக்கோல் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தகவல் கிடைத்ததும் நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் அணைத்தனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...