×

அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான யோகா பயிற்சி

அரியலூர், மார்ச் 4: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் னிவாசன் உத்தரவின்படி ஆயுதப்படை காவலர்களுக்கு அரியலூர் மனவளக்கலை யோகா மன்றம் மூலம் சிறப்பு யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காவலர்கள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என விடுமுறை இல்லாமல், எந்த பண்டிகையாக இருந்தாலும் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்காமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுக் கூட்டம், பேரணி, திருவிழா போன்ற பல்வேறு விஷேச நாட்களில் பணிகளுக்கு தொடர்ந்து காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுவதால் உடலில் அசதி, மன சோர்வு, மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனையடுத்து மனஅழுத்தத்தையும், உடல் எடையையும் குறைக்கும் நோக்கத்தோடு, உடம்பையும், மனதையும் ஒருநிலைப்படுத்தி நலவாழ்வு வாழ்வதற்கு யோகா பயிற்சி வாரம் தோறும் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் எஸ்பி சீனிவாசன் மற்றும் 80க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur Armed Forces ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...