×

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

மயிலாடுதுறை,மார்ச். 4: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் மார்ச் 1ம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் தலைமையில் மோதிரம் வழங்கப்பட்டது, முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மோதிரத்துடன், ஆடையும் வழங்கினர்.

Tags : children ,birthday ,MG Stalin ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...