×

மயிலாடுதுறை நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடையில் உடைப்பு கழிவு நீர் வெளியேறும் அவலம்

மயிலாடுதுறை, மார்ச் 4: நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடையால் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வந்தாலும் நகராட்சி நிர்வாகம் கண்துடைப்பிற்காக செயல்பட்டு சரி செய்து வருகிறது. பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் விளைவாக சாலையில் சாக்கடைக்கழிவுநீர் வெளியேறி துர்நாற்றத்தை ஏற்படுத்தும். உடைப்பு ஏற்பட்டஇடத்தை அடைப்பதற்கு ஏற்படும் கால இடைவெளியில் பல்வேறு இடங்களில் கழிப்பறைநீர் வெறியேறி துர்நாற்றத்தை ஏற்படுத்தி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. தற்போது தரங்கை சாலையில் மட்டும் ஓரிடத்தில் சாலை உள்வாங்கியுள்ளது.

முழுமையாக உடைப்பில் அடைப்பு ஏற்டாததால் 8ம் எண் கழிவுநீரேற்று நிலையத்திற்குச் செல்லும் சாக்கடையில் தடை ஏற்படவில்லை, அதனால் மயிலாடுதுறை தரங்கைச் சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்படவில்லை, அதுவரை நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் தற்பொழுது மயிலாடுதுறை நகரின் மேற்குப் பகுதியில் ஆங்காங்கே ஆள்நுழைவுத்தொட்டியிலிருந்து கழிவுநீர் வெளியேறிவருகிறது. இது பரவலாக ஏற்படுகிறது. பாதாள சாக்கடைக்குழாயில் உடைப்பு ஏற்பட்டாலோ அல்லது கழிவுநீரேற்று நிலையம் செயல்படவில்லை என்றாலோ இதுபோன்று வழிவது வாடிக்கை. தற்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

திடீரென்று மயிலாடுதுறை பேருந்துநிலையத்திற்கு மேல்புறத்தில் உள்ள பகுதிகளில் இதுபோன்று கழிவுநீர் வெளியேறுகிறது. கால்டாக்ஸ் சாலை, கிட்டப்பா பள்ளி அருகில், கஸ்தூரிபாய்தெரு போன்ற இடங்களில் பெரிய அளவில் சென்றாலும் ஆங்காங்கே வழிந்தோடி வருகிறது. பராமரிப்பு பணி மேற்கொள்ளும் நபர்களிடம் கூறினால் வாகனத்தை வைத்து எடுத்து செல்கின்றனர். ஆனால் அதற்கு நிரந்தர தீர்வு இல்லாமல் ஆகிவிட்டது. சாக்கடைக்குழாயில் உடைப்பு ஏற்படாத நிலையில் ஏன் இந்த தேக்கம் இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து ஆள்நுழைவுத்தொட்டியிலிருந்து சாக்கடைநீர் வெளியேறாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : parts ,city ,Mayiladuthurai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...