×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 8ம் நாளாக முஸ்லிம் பெண்கள் 300 பேர் தர்ணா போராட்டம் முன்னாள் எம்எல்ஏ உள்பட 11 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை, மார்ச் 4: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மயிலாடுதுறையில் நேற்று 8ம் நாளாக முஸ்லிம் பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏ உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி முஸ்லிம் பெண்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 8 நாட்களாக இரவு, பகலில் போராட்டம் நடந்து வருகிறது.

நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை ஷாஹின் பாக் என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்த தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் முத்தவல்லி சபீர்அகமது தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன், நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராஜகுமார், முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன், திருச்சம்பள்ளி ஷாஜகான், நிஷார்அகமது உட்பட 11 நபர்கள்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : women ,MLA ,Dharna ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...