×

நாஞ்சில் சம்பத் பேச்சு லஞ்ச ஒழிப்பு சோதனையிலிருந்து சஸ்பெண்டான இன்ஸ். தப்பியது எப்படி?

கரூர், மார்ச் 4: சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் அபிஷேக் மாறன். கடந்த 16ம் தேதி அன்று இவர் தனது காரில் மதுரை சென்று விட்டு சேலம் புறப்பட்டுச் சென்றார். காரை ராஜசேகர் என்பவர் ஓட்டிச் சென்றார்.
கார் வேலாயுதம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண்கள் படுகாயமடைந்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அபிஷேக் மாறன் காரை விடுவிப்பதற்கும், காப்பீடு சான்றிதழ் பெறுவதற்கும் ரூ. 15 ஆயிரம் தர வேண்டும் என வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் செந்தில்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பணம் தர விருப்பமில்லாத அபிஷேக் மாறன், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதனடிப்படையில், கடந்த மாதம் 26ம் தேதி அன்று வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அபிஷேக் மாறன், தலைமைக் காவலர் செந்தில்குமாரிடம் ரூ. 15 ஆயிரம் கொடுத்தபோது, மறைந்திருந்த கரூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், செந்தில்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி சரக டிஐஜி உத்தரவின்பேரில் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் தரப்பில் விசாரித்த போது, அபிஷேக் மாறன் காரை விடுவிக்க இன்ஸ்பெக்டர் தரப்பில் ரூ. 10 ஆயிரம், தலைமைக் காவலர் தரப்பில் ரூ. 5 ஆயிரம் என ரூ. 15ஆயிரம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த அபிஷேக் மாறன், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறியுள்ளார். உடனடியாக இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஏட்டு செந்தில்குமார் ஆகிய இருவர் மீதும் அன்றைய தினமே வழக்கு பதியப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து பிப்ரவரி 26ம்தேதி அன்று வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் சென்று, இன்ஸ்பெக்டரிடம் அபிஷேக் மாறன் பணத்தை கொடுக்கும் போது, கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் இன்ஸ்பெக்டர், வேறு பணி காரணமாக வெளியூர் சென்று விட்டதால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஏட்டு மட்டும் சிக்கினார்.

இந்நிலையில் அபிஷேக் மாறனின் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்காமல் இருந்த இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் அதிரடியாக டிஐஜியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு வழக்குகளில் லஞ்சம் கேட்டு இருவரும் தொந்தரவு செய்து வருவதாக அரசல் புரசலாக கேள்விப்பட்ட மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் இருவரையும் சில மாதங்களுக்கு முன்பு அழைத்து எச்சரிக்கையும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை இருவரும் மாட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sampath Speech Bribery Trial ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு