×

நிர்வாகிகள் உற்சாகம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் வருகை

கரூர், மார்ச் 4: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் வருகிறார். குதிரைப்பந்தயம், இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்ட திமுக சார்பில் குதிரை வண்டி எல்கை பந்தயம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கரூர்- ஈரோடு சாலையில் உள்ள பாலிடெக்னிக் முன்பு நடைபெறுகிறது. மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகிக்கிறார். தாந்தோணி ஒன்றிய செயலாளர் ரகுநாதன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் இளவரசு வரவேற்று பேசுகின்றனர். மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குதிரை பந்தயத்தை துவக்கி வைத்து பரிசு வழங்குகிறார். பெரியகுதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகிறது. பாஸ்கரன் நன்றி கூறுகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா இன்று மாலை 5 மணிக்கு கரூர் சிஎஸ்ஐ விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. மாவட்டபொறுப்பாளர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளவரசு வரவேற்று பேசுகின்றனர். இளைஞர் அணி உறுப்பினர் அட்டையை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். நிர்வாகிகள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அப்துல்லா, கே.சி.பழனிசாமி, நன்னியூர் ராஜேந்திரன், சின்னசாமி, மணிராஜ், பரணிமணி, எம்எல்ஏ ராமர், முரளி, முனவர்ஜான், பல்லவிராஜா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கரூர் வடக்கு நகர செயலாளர் கணேசன் நன்றி கூறுகிறார். இரவு 7 மணிக்கு திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி இல்ல திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

Tags : Udayanidhi Stalin ,Karur ,
× RELATED டிரைவர், சலவை தொழிலாளர் உள்பட...