×

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஏப்.6ல் துவக்கம்

சத்தியமங்கலம், மார்ச் 4:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.  அதிகாலை 4 மணிக்கு துவங்கும் தீ மிதி விழா மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் பக்தர்கள் குண்டம் இறங்குவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த குண்டம் திருவிழா மார்ச் 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து, அம்மன் சப்பரம் திருவீதி உலா சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறுகிறது. மார்ச் 31ம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்வும், ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. ஏப்ரல் 8ம் தேதி புஷ்பரத ஊர்வலமும், 9ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 10ம் தேதி திருவிளக்கு பூஜையும், 13ம் தேதி மறுபூஜை திருவிழாவும் நடைபெற் உள்ள. இதற்கான அறிவிப்பு விளம்பர தட்டி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பண்ணாரி மாரியம்மன் கோயில் அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Pannari Mariamman Temple Gundam Festival ,
× RELATED பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஏப்.6ல் துவக்கம்