×

காளையார்கோவில் பகுதியில் ஊரக புத்தாக்க திட்டம் துவக்கம்

காளையார்கோவில், மார்ச் 4:  காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க  திட்டத்தின் முதற்கட்டமாக மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது. காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகப் பிரியா கணேசன் துவக்கி வைத்தார். ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ் செல்வன் திட்டவிளக்கவுரை ஆற்றினார்.

இம்முகாம் மூலம்  பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சி பள்ளித்தம்பம், நடேசபுரம், வேம்பனி, ஆகிய கிராமங்களில் உள்ள இயற்கை வளங்கள், விவசாயம், நீர் நிலைகள், விளைபொருள்கள், பால் உற்பத்தி, கால்நடைகள், தொழில் முனைவோர்கள் ஆகிய தகவல்களை வளர்ச்சி திட்ட அணியினரால் தேர்வு செய்யப்பட்டு முதல் நிலை தகவல் இரண்டாம் நிலை தகவல்கள் ஒப்பீடு செய்யப்பட்டு மகளிர் குழுக்கள், இளைஞர் குழுக்கள், தொழில் முனைவோர் ஆகியோரிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டனர்.

பின்பு  12வது நாளாக கிராம வளர்ச்சி திட்டம்  தீட்டப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெற உள்ளது.  இம்முகாமில் செயல் அலுவலர்கள் பிரபு, செல்வக்குமார், ரமேஷ், கனகசுந்தரி, ராசு குட்டி  வட்டார அணித்தலைவர்கள், ஜீவியராஜ், பாலசுப்ரமணியன், கார்த்திகேயன் திட்ட செயல் அலுவலர்கள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார மேலாளர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கிராம நடைப்பயணமும் மேற்கொண்டு பல்வேறு தொழில் வாய்ப்புகளை கண்டறிந்தனர். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்கள், திட்ட செயலர்கள், தெய்வநாதன், முருகானந்தம், சரவணக்குமார், அய்யனார் மற்றும் கிராம வளர்ச்சி திட்ட அணியினர், புவனேஸ்வரி, செல்வி, ஜெயா, ஜான்சி எலிசபெத், நட்சத்திரம், காளீஸ்வரி, ஆரோக்கி அணிதா ஆகியோரும்  கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்