தேவகோட்டை அருகே ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு சான்றிதழ்

தேவகோட்டை, மார்ச் 4: தேவகோட்டை அருகேயுள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியை தனலெட்சுமி தலைமை வகித்தார். மாணவர் ரகுபதி வரவேற்றார். ஜே.ஆர்.சி கவுன்சிலர் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஜோசப் ஜே.ஆர்.சி.மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். மாணவி பரமேஸ்வரி நன்றி கூறினார்.

Related Stories:

>