×

மலையாண்டி பட்டணத்தில் நெசவாளர்களுக்கு 2 நாள் பயிற்சி

உடுமலை, மார்ச் 4:உடுமலை அருகே உள்ள மலையாண்டி பட்டணத்தில், பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், நெசவாளர்களின் அனுபவ திறனுக்கான அரசு அங்கீகாரம் என்ற திட்டத்தின்கீழ், ஊக்கத்தொகையுடன் கூடிய 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இதில் 100 பெண் நெசவாளர்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர். முகாம் பொறுப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். ஊர் செட்டுமை தண்டபாணி, நிர்வாக கமிட்டி நடராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொழிலதிபர் கணேஷ்பாபு தலைமையில் பயிற்றுநர்கள் மூர்த்திகுமார், தங்கராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.  இத்திட்டத்தில் நெசவாளர்களுக்கு மத்திய அரசின் பணித்திறன் சான்றிதழ், ஊக்கத்தொகை ரூ.500, மூன்று ஆண்டுக்கு 2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் நெசவாளர்களின் வாழ்க்கை தர மேம்பாட்டுக்கான தொழில் அபிவிருத்தி வாய்ப்புகள், புதிய தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், வங்கி கடன் பெறுவதற்கான எளிய முறைகள், கைபேசி வழி அரசு சேவைகள், பணமில்லா பரிவர்த்தனை, சுய முன்னேற்றம் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டன. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் 2,500 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 1,200 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சுபாகரன் கூறினார்.

Tags : weavers ,town ,Malayali ,
× RELATED அறந்தாங்கி அருகே பரபரப்பு திமுக நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு