×

சித்தர் பாபுஜி சுவாமிக்கு வீரவாள்

கோவை, மார்ச் 4:  தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரங்கராஜன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் தாமரை முருகன், மாநில துணைத் தலைவர் தங்கராஜ் ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்வகர்மா சமுதாய மக்கள் மேம்பட தொழில் வளம் பெருகி வியாபாரம் முன்னேற்றம் அடைய  சிறப்பு  மகா சக்தி யாக பூஜை விஸ்வ கர்ம ஜகத்குரு சித்தர் சிவ சண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடந்தது.

இதை தொடர்ந்து நடந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பத்துறை  முன்னாள் அமைச்சர்  மணிகண்டன் பங்கேற்றார்.  இதில், அனைத்து மக்களுக்கும் சமூக சேவை, ஆன்மீக சேவை, மருத்துவ சேவை அளிக்கும் பாபுஜி சுவாமியின் பணியை பாராட்டி வெண்கல வீர வாளை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். இந்த விழாவில் விஸ்வகர்மா அமைப்புகளின் நிர்வாகிகள் பொன்ராஜ், எஸ்ஆர்எம் பாலசுப்ரமணியன்,  தமிழரசன், மதுரை கண்ணன், கோவில்பட்டி ஆறுமுகம், கோவை வரதராஜ் ,  மலுமிச்சம்பட்டி ராஜேந்திரன், தங்கையா, பொன்ராஜ், டாக்டர் ரமேஷ், திருக்குமார், விஸ்வஜன முன்னேற்றக்கழக தலைவர் வேல்முருகன், அன்னூர் அருணாசலம் என பலர் கலந்து கொண்டனர்.

Tags : Siddharth Bapuji ,Swami ,
× RELATED சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்