×

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

ஈரோடு, மார்ச் 4: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வெள்ளோட்டில் பறவைகள் சரணாயலம் 210 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வரும் கசிவுநீரால் ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இந்தாண்டு நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் மற்றும் நிலப்பறவைகள் உள்ளது.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பறவைகள் சரணாலயத்தில் தினசரி 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறியதாவது:
இந்த வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் ஏற்கனவே உள்ள போட்டோ காட்சிகளை மாற்றி ஒளி, ஒலி காட்சியாக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இயற்கை ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகளை கவர நடைபாலம், கண்காணிப்பு கோபுரம், இயற்கை அமர்ந்து ரசிக்கும் வகையில் இருக்கை வசதிகள், நிழற்குடைகள், போட்டோ வியூ போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் பறவைகளின் பெயர், எங்கிருந்து வருகிறது. அதன் சிறப்பு குறித்து தொகுத்து வருகிறோம். மேலும், பல்வேறு பறவைகள் சரணாலயங்கள் விபரம், சுற்றுலா பயணிகள் ஆர்வமாக கேட்கும் தகவல்களை சேகரிக்கிறோம்.

இங்கு சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வெள்ளோடு பகுதியில் படித்த, ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இவற்றை சொல்லி கொடுத்து அவர்களை கைடு போல செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கைடு கட்டணமாக 50 ரூபாய் நிர்ணயித்தால் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், சரணாலயம் தொடர்பான விபரங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : White Bird Sanctuary ,
× RELATED காதலர்களின் சரணாலயமாக மாறும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்