×

தி.மலை) பர்வதமலையில் தீ விபத்து எதிரொலி வனப்பகுதி பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு

கலசபாக்கம், மார்ச் 4: பர்வதமலையில் தீ விபத்தை தடுத்து வனப்பகுதியை பாதுகாத்திட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பர்வதமலையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இம்மலையில் விலைமதிப்பில்லாத மூலிகைகள் உள்ளன. அடிக்கடி இங்கு தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. தீ விபத்துக்கள் ஏற்படும் போது வனத்துறை அதிகாரிகளும், தன்னார்வலர்களும், கிராம பொதுமக்களும், பர்வதமலை பாதுகாப்பு குழுவினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக பர்வதமலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது, வனத்துறையினரும், பொதுமக்களும் இரவு பகலாக தீயை அணைத்தனர். மேலும், வனப்பகுதியை பாதுகாத்திடவும், பர்வதமலையில் தீ விபத்தை தடுத்திடவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் பர்வதமலை வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சுரேஷ், செந்தில் மற்றும் வனத்துறையினர் உறுதி மொழி மேற்கொண்டனர். மேலும், தீவிபத்துக்களை தடுத்திட, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், துணை தலைவர் பொய்யாமொழி, கடலாடி ஊராட்சி தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...