×

(தி.மலை) ஜெயலலிதா பிறந்த நாளையொட்டிபள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் அமைச்சர் வழங்கினார்

கீழ்பென்னாத்தூர், மார்ச் 4: கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் நடுநிலைப்பள்ளியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு அமைச்சர் நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கினார். கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் நடுநிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட சிறுபாண்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோர் பேசினர். இதையடுத்து, அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ₹1 லட்சம் மதிப்பிலான நோட்டு, பேனா, டிஸ்னரி, டிபன் கேரியர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார். முடிவில் நகர செயலாளர் ஒ.சி.முருகன் நன்றி கூறினார். இதில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jayalalithaa ,birthday ,
× RELATED ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்கப்...