×

திண்டிவனத்தில் கொரோனா வைரஸ் வதந்தி

திண்டிவனம், மார்ச் 4: திண்டிவனத்தில் கொரோனா வைரஸ் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து  திண்டிவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் வளவனிடம் கேட்டபோது, இரண்டு நாட்களாக  சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அது  முற்றிலும் வதந்தி என தெரிவித்தேன்.

மேலும் கார்த்தி, ஆறுமுகம்  ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், இவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனத்திலிருந்து  விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொடர்ந்து  வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் சாலை விபத்தில்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்கள்  நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். ஆகையால் கொரோனா  வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என மருத்துவர்  தெரிவித்தார்.

Tags : Corona ,Tindivanam ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...