×

கூட்டேரிப்பட்டில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை

விக்கிரவாண்டி, மார்ச். 4: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (58). தொழிலாளி. இவர் சொந்த வேலை காரண
மாக வெளியூர் சென்று விட்டார். இவரது மனைவி அஞ்சலை (55). மகன்கள் சிலம்பரசன், வேணு மற்றும் சிலம்பரசன் மனைவி கலைச்செல்வி ஆகியோர் வீட்டில் வழக்கம் போல் இரவு தூங்கிவிட்டனர். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அஞ்சலை வீட்டின் முன்பக்க கதவை திறந்து வெளியே வந்து இயற்கை உபாதை கழித்துவிட்டு மீண்டும் கதவை பூட்டாமல் அப்படியே சென்று தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டினுள் ஆள் நடமாடும் சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த அஞ்சலை மகன்களை எழுப்பியபோது பின்வாசல் வழியாக அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடியுள்ளார். அஞ்சலை கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தாலி சரடை காணவில்லை. வீட்டில் நுழைந்த மர்ம நபர் தாலி சரடை திருடிக்கொண்டு அறைக்குள் நுழைய முற்பட்டபோது சத்தம் கேட்டு அஞ்சலை எழுந்ததால் தப்பி ஓடியுள்ளான்.

மற்றொரு சம்பவம்: இதுபோல் கூட்டேரிப்பட்டு ஜானகி நகரை சேர்ந்தவர் பச்சையப்பன்(55). இவர் தனது குடும்பத்தினருடன் இரவு தூங்கி
யுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 7500 பணத்தை காணவில்லை. இரவில் மர்ம நபர்கள் வீட்டில் வந்து திருடி சென்றது தெரிந்தது. இந்த இரண்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடத்தை
பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

கூட்டேரிப்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. கூட்டேரிப்பட்டு பகுதியில் தொடர் திருட்டு காரணமாக  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இரவு நேரங்
களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Robbery ,adjoining houses ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...